ஈரோடு மாவட்டம் கடம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நீர்க்குண்டி கிராமத்தில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பெரியோரைச் சேர்ந்த சதானந்தம் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் இருந்து 18 குட்கா மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.