27 டன் யூரியா, 3 டன் கோதுமை பதுக்கல்: இருவர் கைது

511பார்த்தது
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அடுத்த பாரதி நகர் காலனியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான குடோனில், அகமது அலி அப்துல்லா என்ற இருவர் கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்து, வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு வெள்ளை சாக்கு முட்டைகளில் மாற்றி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், குடோனை சோதனை செய்ததில் 540 மூட்டை யூரியா (27 டன்) மற்றும் 60 மூட்டை கோதுமை (3 டன்) பறிமுதல் செய்யப்பட்டன. நம்பியூர் காவல்துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி