ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் பகுதியில் மட்டன் ஸ்டால் நடத்தி வந்த சுரேஷ் (41) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (38) ஆகியோர் கனமழையின் போது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொளப்பலூரைச் சேர்ந்த இந்த தம்பதியினர், தங்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.