கோபி பகுதியில் மின்னல் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்தனர்

3பார்த்தது
கோபி பகுதியில் மின்னல் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்தனர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொலப்பலூர் கிராமத்தில் இறைச்சி கடை நடத்தி வந்த சுரேஷ் (49) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (38) ஆகியோர் நேற்று மாலை கனமழை மற்றும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரும் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் கோபி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி