கோபிசெட்டிபாளையம் அமலா பள்ளி பிரிவு அருகே புதிய நகைக்கடையை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதி வளர்ச்சிக்கு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். குறிப்பாக, புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், கோபிசெட்டிபாளையத்தை தலைநகராக மாற்ற முதல்வரிடம் பேசி நிதி ஒதுக்கீடு பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.