ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த சுஜில்கரை பகுதியில் கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக மது பாட்டில்களை வாங்கி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்வதாக கடம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சுஜில்கரை பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அங்கு சட்டவிரோதமாக 21 கர்நாடக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.