டி என் பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கணக்குப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த வாரம் சௌந்தர் என்ற விவசாயியின் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கிச் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுத்தையின் கால் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
