ஈரோடு: கூண்டில் சிக்கிய சிறுத்தை

85பார்த்தது
ஈரோடு மாவட்டம், மாராயிபாளையம் பகுதியில் நான்கு மாதங்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின் பேரில், கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிறுத்தையை பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, மங்கலப்பட்டியில் சிறுத்தை விடுவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி