கோபி அருகே மது விற்றவர் கைது

52பார்த்தது
கோபி அருகே மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொத்துக்காடு பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த ஒருவரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 12 மது பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (வயது 49) என்பதும், அவர் சட்டவிரோதமாக மது விற்றதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முனிராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி