ஈரோடு மாவட்டம் சிறுவலூர் அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிறுவலூர் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நாகதேவி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.