ஈரோடு மாவட்டம் அரசூர் அடுத்த இண்டியம் பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடத்தூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இண்டியம்பாளையம் ரோகிணி மில் அருகில் ரஞ்சித் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.