ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே முடக்கந்துறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், பேருந்து நிறுத்தத்தில் ரமேஷ் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.