ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கணக்கம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட பழனிச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.