ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி கோவிலூர் பகுதியில் கர்நாடகாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடம்பூர் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, குன்றியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மாதேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.