ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடம்பூர் தனிப்பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.