விடுபட்டுள்ள குளம் மற்றும் குட்டைகளை உடனடியாக இணைக்கவேண்டும்

1பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர் பேருந்து நிலையம் முன்பாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழு கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தில் விடுபட்டுள்ள குளம் மற்றும் குட்டைகளை உடனடியாக இணைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நூற்றுக்கணக்கான குளம் மற்றும் குட்டைகள் விடுபட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், நிரந்தர வறட்சியைப் போக்கவும், விடுபட்ட நீர்நிலைகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை அரசு உடனடியாகத் தயாரித்து, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனவும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். தவறும்பட்சத்தில், அடுத்த கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி