ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே முருகம்புதூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அவசரகால தேவைக்கான ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியது.