ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரின் மகன் ஜீவானந்தம், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் தாயையும் தங்கையையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குடிக்க பணம் தர மறுத்ததால், மதுபோதையில் இருந்த ஜீவானந்தம், தனது தாய் சகுந்தலா மற்றும் தங்கை ஜீவிதா ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஜீவானந்தம் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.