ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயா, தனது பட்டாவில் பெயர் சேர்க்க களஞ்சியம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஜெயாவிடம் கொடுத்து சசிகுமாரிடம் கொடுக்க அனுப்பினர். பணம் பெற்றபோது சசிகுமார் கையும் களவுமாக பிடிபட்டார். அப்போது, கோபி மண்டல துணை தாசில்தார் மணிமேகலை லஞ்சம் வாங்கியதாக சசிகுமார் தெரிவித்ததை அடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.