ஈரோடு மாவட்டம், குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை இயற்பியல் ஆசிரியரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வரும் ஆசிரியரை மாற்றக் கூடாது என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.