அந்தியூர் மற்றும் பவானி தாலுகாக்களில் உள்ள 35 தனியார் பள்ளிகளின் 275 வாகனங்கள், அந்தியூர் அருகே பருவாச்சி தனியார் பள்ளி வளாகத்தில் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கோபிசெட்டிபாளையம் வட்டார
போக்குவரத்து அலுவலர் நடராஜன் தலைமையில்,
போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, கண்காணிப்பு கேமராக்கள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி செயல்பாடுகள், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பான் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.