கோபியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தற்கொலை

75பார்த்தது
கோபியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தற்கொலை
கோபி அருகே பரிதாபம் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த பழனிகவுண்டர் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (25). ஜோசியம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர், பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், சிவகுமார் தான் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை மணி அளித்த புகாரின் பேரில், கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி