ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம், கொடிவேரி அரக்கன்கோட்டை வாய்க்காலில் தீயணைப்பு வீரர்கள், தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடத்தினர். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையில் இந்த ஒத்திகை நடந்தது. இதற்காக உரிய பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்பு வீரர்கள் அணிந்திருந்தனர்.