ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 3979 கிலோ பாக்குகள் ரூ. 4,09,497 மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டன. பாக்கு பச்சை காய்க்கு அதிகபட்சமாக ரூ. 70.10, குறைந்தபட்சமாக ரூ. 47.00 விலை கிடைத்தது. வரக்காய் ரூ. 188.00 வரையிலும், பாக்கு பழம் ரூ. 68.00 வரையிலும் அதிக விலைக்கு ஏலம் போனதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.