கோபிசெட்டிபாளையம் அருகே, பழுது பார்க்க விடப்பட்ட கார் சோதனை ஓட்டத்தின்போது தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஈரோட்டைச் சேர்ந்த மதிவாணன் தனது காரை பழுது பார்க்க விட்டிருந்தார். அங்கு பணிபுரியும் விக்னேஷ் என்பவர் காரை சோதனை ஓட்டத்திற்காக கோபிசெட்டிபாளையம் - ஈரோடு சாலையில் ஓட்டிச் சென்றபோது, தாசம்பாளையம் அருகே காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிய நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தாலும், கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.