கீழ்பவானி கால்வாய் ஓரம் சாராயம் காய்ச்சிய இருவர் கைது

1102பார்த்தது
திங்களூர் போலீசாருக்கு நிச்சாம்பாளையம் கீழ்பவானி கால்வாய் ஓரமாக சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கு சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து, நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 லிட்டர் சாராயமும், சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி