டி.என். பாளையம் அருகே உள்ள வினோபா நகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள விளாங்க கோம்பை மலை கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 30 மாணவ மாணவியர் கொங்கர் பாளையம் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இதுவரை சரக்கு வாகனத்தில் சென்று வந்த மாணவர்களுக்கு, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் குறைகளைக் கேட்டறிந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிதாக வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்து, மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.