கோபிசெட்டிபாளையம் அருகே கிராம மக்கள், தார் சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து, 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக சிதலமடைந்துள்ளது. இதனால், மக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.