விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்முறையாக தமிழக அரசு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுக்கு சமூகநீதி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்
பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் வகையில், ஈரோடு கிழக்கு மாவட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.எம். சாதிக் தலைமையில், ஈரோடு மண்டல செயலாளர் ஏ. ஜாபர் அலி முன்னிலையில் பெரியார் திருவுருவச் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.