தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற கே. ஏ. செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்திற்கு நேற்று இரவு வருகை தந்தபோது, அரசு அலுவலர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக கோபிசெட்டிபாளையம் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.