ஈரோடு: பேருந்து மோதி தொழிலாளி படுகாயம்.. சிசிடிவி காட்சிகள்

1488பார்த்தது
கவுந்தப்பாடி அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன், சாலை கடக்க முயன்றபோது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கவுந்தபாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி