ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நாகதேவம்பாளையம், ஊஞ்சக்கொரை பகுதியில் சண்முகம்(62) என்பவர் இரும்பு வொர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையை கடந்த 4ம் தேதி இரவு பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். மறுநாள் 5ம் தேதி காலை வந்து பார்த்தபோது கடைக்கு வெளியே வைத்திருந்த இரும்பு அடிக்கும் அடிக்கல்-3, கடப்பாரை-1, மற்றும் 2 அடி நீளமுள்ள முறுக்குக் கம்பி 15 ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் தேடிப்பார்த்தபோது நாகதேவம்பாளையம் பஸ்ஸ்டாப் அருகில் சாக்குபையுடன் 2 வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பிடிக்க முயன்றபோது சாக்குபைகளை அங்கேயே வீசிவிட்டு 2 பேரும் தப்பியோடிவிட்டனர்.
பின்னர், ஊர்க்காரர்கள் உதவியுடன், அதே ஊரைச் சேர்ந்த ராஜா(19) என்ற வாலிபரை சுற்றிவளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். கார்த்திகேயன் என்பவரை போலீசார் தேடிவருகிறார்கள். ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காணாமல்போன இரும்பு வொர்க்ஷாப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.