
6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் வகைகள் பறிமுதல்செய்த அதிகாரிகள்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட தனியார் நிறுவனத்தில் இருந்து சுமார் 6 லட்சம் மதிப்பிலான நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொடக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோலார் சிஎஸ்ஐ காலனி பகுதியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் நான்கு இயந்திரங்கள் மூலம் நெகிழிப்பைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 6 லட்சம் மதிப்பிலான 6000 கிலோ நெகிழிப்பைகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.




































