ஈரோடு: வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

552பார்த்தது
ஈரோடு: வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை
ஈரோடு மாவட்டம், ஈங்கூர் சிப்காட் பகுதியில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னிமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பர்மன் (28) மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்த ஜித்தேந்திரா குமார் தாஸ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி