ஈரோட்டில் போதை மாத்திரை விற்பனை: 5 பேர் கைது

0பார்த்தது
ஈரோட்டில் போதை மாத்திரை விற்பனை: 5 பேர் கைது
கருங்கல்பாளையம் அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மரப்பாலம், ரங்கபவனம் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் (24), கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தரணிதரன் (23), அரசிளங்கோ வீதியைச் சேர்ந்த நாகரத்தினம் (21), வளையக்கார வீதியைச் சேர்ந்த சந்துரு (22), மணிவேல் (20) ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 5 பேரையும் கைது செய்து, ரூ.7,500 மதிப்பிலான மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி