வேளாண் குறைதீர் கூட்டம் : ஈரோடு ஆர்டிஓ- விடம் 13 விவசாயிகள் மனு

61பார்த்தது
வேளாண் குறைதீர் கூட்டம் : ஈரோடு ஆர்டிஓ- விடம் 13 விவசாயிகள் மனு
ஈரோட்டில் கோட்ட அளவில் நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் 13 விவசாயிகள் ஆர்டிஓ. விடம் மனு அளித்தனர்.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர்(ஆர்டிஓ) ரவி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை ஆகிய 4 தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். தொடா்ந்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ. உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஆர்டிஓ. வின் நேர்முக உதவியாளர் அமுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் குறித்து ஆர்டிஓ. ரவி கூறுகையில், இன்று(நேற்று) நடந்த கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் 13 விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பட்டா கேட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன, என்றார்.

தொடர்புடைய செய்தி