ஈரோடு: கஞ்சா விற்றவர் கைது

60பார்த்தது
ஈரோடு: கஞ்சா விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் தாமேதரன் தலைமையிலான போலீசார் காட்டுப்பாளையம் பகவதி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக கையில் பிளாஸ்டிக் கவருடன் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தம் (56) என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 230 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி