ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அடுத்த சின்ன புலியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி, தனது 10 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை மற்றும் மக்காச்சோளப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது, மோட்டார் இயங்காததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மோட்டாருடன் பொருத்தப்பட்டிருந்த காப்பர் வயர் திருடு போனது தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற தோட்டங்களில் இருந்தும் சுமார் 250 மீட்டர் காப்பர் வயர் திருடப்பட்டிருந்தது. காவல்துறையினர் விசாரணை நடத்தி, கிரண் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.