ஈரோடு: அரசின் கல்வி உதவித்தொகை அழைப்பு - ஏ.டி.எஸ்.பி. அறிவுறுத்தல்

58பார்த்தது
ஈரோடு: அரசின் கல்வி உதவித்தொகை அழைப்பு - ஏ.டி.எஸ்.பி. அறிவுறுத்தல்
வாட்ஸ்- அப்காலில் அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார்.  

 ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்-ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்மநபர், கல்வி உதவித்தொகை பிரிவிலிருந்து பேசுவதாகவும், ஜெயலட்சுமியின் மகள் பெயரைக் கூறி கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும், அதனை வீடியோ கால்மூலம் ஜிபேவில் அனுப்புவதாகவும், அதற்குக் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்யக் கூறியுள்ளார். 

இதனை உண்மையென நம்பி ஜெயலட்சுமியின் மகள் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்தை அந்த மர்மநபர் அடுத்த சில விநாடிகளிலேயே ஆன்லைன் முறையில் திருடிக் கொண்டார். இதுகுறித்து ஜெயலட்சுமி அவரது மகளுடன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.