தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்த ஈஸ்வரன்

622பார்த்தது
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே ஓடாநிலையில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ. ஆர். ஈஸ்வரன், ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு கம்பீரமான சிலை அமைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நாமக்கல்லில் டாக்டர். சுப்பராயனுக்கு மணிமண்டபம் மற்றும் கரூரில் சுதந்திரப் போராட்ட வீரருக்கு சிலை திறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி