ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் வட்டாரப்
போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை பகுதிகளைச் சேர்ந்த 100 பள்ளிகளின் 1009 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.