ஈரோடு சூரம்பட்டியில் கஞ்சா விற்றவர் கைது

59பார்த்தது
ஈரோடு சூரம்பட்டியில் கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது ஈரோடு, சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், ஈரோடு அடுத்துள்ள ஆர்.என்.புதூர், சி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (25) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.800 மதிப்பிலான 80 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி