ஈரோடு கிழக்கில், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் சங்க தலைவர் சாந்தி, சங்கத்தின் பார்த்திபன், மகேந்திரன் ஆகியோர் தலைமையில் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இத்திட்டத்தில் தோட்டக்கலை அலுவலர் தவிர மற்றவர்களை இணைத்து நான்கு வருவாய் கிராமங்களுக்கு ஒரு அலுவலர் நியமிக்கும்போது, மீதமுள்ள தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் பாதிக்கப்படுவதாகவும், வேளாண்மை அல்லாத துறைகளை இணைக்கும்போது திட்டத்தின் சிறப்பு குறைவதாகவும் கூறி, இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.