சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே மதுபான கடை மூடல்

605பார்த்தது
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே மதுபான கடை மூடல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடக்கு அங்க சமுத்திரம் பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த அரசுக்கு சொந்தமான மூன்று மதுபான கடைகள், தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இந்த கடைகள் மூடப்பட்டது அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.