ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தழுவம்பாளையம் பகுதியில் சாந்தி என்ற பெண் இருசக்கர வாகனத்தில் கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடுமுடி காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.