ஈரோட்டில் அன்புச்சோலை மையங்கள் திறப்பு

0பார்த்தது
ஈரோட்டில் அன்புச்சோலை மையங்கள் திறப்பு
60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் தனிமை, மருத்துவ பராமரிப்பு மற்றும் நிதி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு 'அன்புச்சோலை' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், பகல் நேர பராமரிப்பு, பாதுகாப்பான சூழல், வயதினருடன் பழகும் வாய்ப்பு, சிற்றுண்டி, தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவ வசதிகள், நூலகம், யோகா, உடற்பயிற்சி, கலை, குழு விவாதங்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வழங்கப்படும். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் மற்றும் ஜீவா நகரில் தலா ஒரு அன்புச்சோலை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இந்த மையங்களை பார்வையிட்டு முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி