சவப்பெட்டி கட்டி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு

0பார்த்தது
சவப்பெட்டி கட்டி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு
சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரியபிரகாஷ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், சவப்பெட்டி கட்டி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாஷா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி