மது கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

1259பார்த்தது
மது கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எண் 3811-ஐ நிரந்தரமாக அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்ததாகவும், குழந்தைகள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் இவ்வழியாக செல்வதாகவும், இதனால் மது பிரியர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பவ இடத்தில் அம்மாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி