பொதுப்பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

1பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெருமாள் கோவில் புதூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பொதுப்பாதையை ஆக்கிரமித்து சுத்தம் செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். மனோஜ், சிவகுமார், பசுத்தீஸ்வரன் ஆகியோர் பொதுப்பாதையை சுத்தம் செய்ய விடாமல் தகராறு செய்ததாகவும், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறையில் பணிபுரியும் சக்திவேல் என்பவர் மனோஜுக்கு உதவியாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பராமரிப்பு பணிகளை தடுக்கும் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி