தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைசெய்த இருவர் கைது

1பார்த்தது
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைசெய்த இருவர் கைது
மாவட்ட போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் சூளை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பேக்கரி ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. கடை உரிமையாளர் துரைசாமி (56) கைது செய்யப்பட்டு, ரூ. 2,200 மதிப்பிலான 1.347 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், மொடக்குறிச்சி போலீசார் எழுமாத்தூர் பகுதியில் நடத்திய சோதனையில், மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளர் பிரசாந்த் (20) கைது செய்யப்பட்டு, 320 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி